சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாமல்லபுரத்தில் இனி சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் முறையாக தமிழ்நாடு அரசின் அனுமதி பெறாமல் சுற்றுலாத்துறை சார்ந்த ஏற்பாட்டு நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றனர். தங்குமிடம், உணவு, பயணம் ,சாகச பொழுது போக்கு, சாகச விளையாட்டு உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
மேலும் உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் மட்டும் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக அரசு அந்நிறுவனங்களை கட்டாய பதிவு செய்ய அறிக்கை விடுத்துள்ளது. பதிவு செய்யாமல் இயங்கி வரும் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை விடுத்துள்ளார். மாமல்லபுரத்தில் இயங்கி வரும் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் www.tntourismtors.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.














