மேற்கு வங்க தேர்தலில் தனியாக போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

January 24, 2024

மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிட இருப்பதாக மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கில் பிரச்சனை உருவாகியது. இதில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்கள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி ஏற்கனவே […]

மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிட இருப்பதாக மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கில் பிரச்சனை உருவாகியது. இதில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்கள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனை காங்கிரஸ் மறுத்து வந்த நிலையில் தனியாக போட்டியிட தயார் என காங்கிரஸ் தலைவர் தெரிவித்து வந்தார். தற்போது மேற்கு வங்காளத்தில் நாங்கள் பாஜகவை தனித்து நின்று எதிர்கொள்வோம் எனும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu