மனப்புரம் பைனான்ஸ் அதிபரின் 143 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான மனபுரம் பைனான்சில், அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது பண மோசடி புகார்கள் எழுந்த நிலையில், நிறுவனத்தின் அதிபர் வி பி நந்தகுமாருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது, இந்த நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி பி நந்தகுமாரின் 143 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையினர் […]

கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான மனபுரம் பைனான்சில், அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது பண மோசடி புகார்கள் எழுந்த நிலையில், நிறுவனத்தின் அதிபர் வி பி நந்தகுமாருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது, இந்த நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி பி நந்தகுமாரின் 143 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையினர் திருச்சூரில் உள்ள நிறுவன வளாகங்களில் சோதனை நடத்திய பின்னர், “வி பி நந்தகுமார், மனப்புரம் அக்ரோ பார்ம்ஸ் என்ற தனது தனிப்பட்ட நிறுவனம் மூலம், ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி பொதுமக்களின் வைப்புத் தொகை தொடர்பான பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது. பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் மோசடிகள் செய்ததற்கான ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. மனப்புரம் பைனான்ஸ் அலுவலகங்களில் பணி செய்து வரும் ஊழியர்கள் மூலம் சட்ட விரோதமான வைப்புகள் பதிவாகியுள்ளன. அதன் மூலம், இவருக்கு 143 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அவற்றை, தனது பெயரிலும், மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலும், மனப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளிலும் அவர் முதலீடு செய்துள்ளார். எனவே, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது 143 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu