மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி என்ற இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை தாக்குதலால் சுமார் மூன்று மாதங்களாக அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது . இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து கலவரம் நடந்துவரும் நிலையில் ராணுவப்படை வீரர்கள் அங்கு ஆயுதம் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். இதில் பாதுகாப்பு கிடங்கில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
மாநில முழுவதும் இதுவரை 1,195 கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடி மருந்துகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர 10,000 பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் கூடுதலாக 800 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.