கேரளாவில் தேயிலை தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸார்கள் ஆளில்லா விமானம் மூலம் மாவோயிஸ்டுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் கடந்த 28ஆம் தேதி கேரளா வன வளர்ச்சி கழக அலுவலகத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்.இதனை அடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க கடந்த 5 ம் தேதி தோட்டத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து தேயிலைத் தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் மாவோயிஸ்டுகளை கண்காணிக்க ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிடைக்கும் தகவல்களை காடுகளை அடக்கிவரும் ஆன் பீல்ட் கமாண்டோக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வயநாடு மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இந்த படையுடன் இணைந்து செயல்பட இருப்பதாக கேரள காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா














