வாட்ஸ் அப்பில் புதிதாக 'கீப் இன் சாட்' அம்சம் அறிமுகம் - ஜூக்கர்பர்க் அறிவிப்பு

வாட்ஸ் அப்பில் புதிதாக, ‘கீப் இன் சாட்’ என்ற புதிய அம்சம் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில், வாட்ஸ் அப்பில், பயனர் ஒருவர் தனது விருப்பத்தின் பேரில், செய்திகளை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, நீக்கச் செய்யும் அம்சத்தை வைத்துக் கொள்ளலாம். இதன் போது, அந்த நேரம் தாண்டியவுடன், செய்திகள் அனைத்துமே சாட்டில் இருந்து நீக்கப்பட்டு விடும். இதற்கு ஒரு மாற்றாக, கீப் இன் சாட் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, […]

வாட்ஸ் அப்பில் புதிதாக, ‘கீப் இன் சாட்’ என்ற புதிய அம்சம் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், வாட்ஸ் அப்பில், பயனர் ஒருவர் தனது விருப்பத்தின் பேரில், செய்திகளை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, நீக்கச் செய்யும் அம்சத்தை வைத்துக் கொள்ளலாம். இதன் போது, அந்த நேரம் தாண்டியவுடன், செய்திகள் அனைத்துமே சாட்டில் இருந்து நீக்கப்பட்டு விடும். இதற்கு ஒரு மாற்றாக, கீப் இன் சாட் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மற்ற செய்திகள் நீக்கப்பட்டாலும், குறிப்பிட்ட செய்தியை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால், செய்திகளை தக்க வைத்துக் கொள்வதற்கான அதிகாரம் அனுப்புனருக்கு வழங்கப்படுகிறது. அனுப்புநர், செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீக்க வேண்டும் என்று கோரும் பட்சத்தில், பெறுநருக்கு அந்த செய்தி நீக்கப்பட்டு விடும். ஒருவேளை, பெறுநர் அந்த செய்தியை தக்க வைத்துக்கொள்ள விரும்பினால், அனுப்புநருக்கு இது தொடர்பான அறிவிப்பு அனுப்பப்பட்டு, அனுப்புனரின் ஒப்புதல் பெயரில் மட்டுமே, செய்திகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம், செய்திகளை சரியான நபரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu