உக்ரைனை மீட்டெடுக்க 'மார்ஷல் திட்டம்' - பெர்லினில் ஒன்று ௯டும் மேற்கு நாடுகளின் தலைவர்கள்

October 25, 2022

ரஷ்யாவின் படையெடுப்பில் சிதைந்த உக்ரைனுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் திட்டமான 'மார்ஷல் திட்டத்தை' செயல்படுத்துவது குறித்து விவாதிக்க மேற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பெர்லினில் ஒன்று ௯டுகிறார்கள். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்டார். அதில் இருந்து உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டது. இச்செயலை மேற்கத்திய நாடுகள் நில அபகரிப்பு என்று கண்டனம் செய்தன. மேலும் ஒரு வணிக மன்றத்தில் பேசிய […]

ரஷ்யாவின் படையெடுப்பில் சிதைந்த உக்ரைனுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் திட்டமான 'மார்ஷல் திட்டத்தை' செயல்படுத்துவது குறித்து விவாதிக்க மேற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பெர்லினில் ஒன்று ௯டுகிறார்கள்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்டார். அதில் இருந்து உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டது. இச்செயலை மேற்கத்திய நாடுகள் நில அபகரிப்பு என்று கண்டனம் செய்தன.

மேலும் ஒரு வணிக மன்றத்தில் பேசிய ஜெர்மன் சான்சிலர் ஸ்கோல்ஸ், உக்ரைன் ஒரு நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஜெர்மனி விரும்புவதாகக் கூறினார். அதன் அடிப்படையில் இந்த மாநாடானது ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தால் நடத்தப்படுகிறது. மேலும் உக்ரைனை சரிசெய்வதற்காக மதிப்பிடப்பட்ட 750 பில்லியன் டாலர் தொகையைப் பற்றி எந்த உறுதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.  இந்த மார்ஷல் திட்டமானது இரண்டாம் உலகப்போ௫க்குப் பிறகு ஐரோப்பாவை மீண்டும் எழுச்சிபெற செய்யும் அமெரிக்காவின் உதவித் திட்டமாகும். இந்த புனரமைப்பு வடிவம் எதிர்காலத்தில் உக்ரைன் எப்படி இருக்கும் என்பதை வடிவமைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu