இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி மற்றும் ஹுண்டாய் ஆகியவை வாகன கண்காட்சி 2023 ல், தங்கள் மின்சார வாகனங்களை நாளை வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசுமை எதிர்காலத்தை நோக்கிய முயற்சியாக வாகன நிறுவனங்கள் பலவும் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் பல நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் இந்த வாகன கண்காட்சியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா, யமஹா ஆகிய வாகனங்கள் இருசக்கர வாகனங்களில் நவீன ரக வாகனங்களை காட்சிப்படுத்தப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
மாருதி சுசுகி சார்பாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹிசாசி தக்கூச்சி, “எங்கள் நிறுவனத்தின் சார்பாக, நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹைபிரிட் வாகனங்கள், எஸ்யூவி ரக வாகனங்கள், பல்வேறு எரிபொருளில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவை காட்சி படுத்தப்படும்” என்று கூறினார். ஹூண்டாய் நிறுவனமும் நவீன ரக வாகனங்களை காட்சி படுத்த உள்ளது. எஸ் யு வி ரக மற்றும் மின்சார வாகனங்கள் ஹூண்டாய் சார்பாக இடம்பெறும் என்று கருதப்படுகிறது.