மாருதி சுசுகி நிறுவனத்தின் கடந்த காலாண்டு லாபம் இரு மடங்கு உயர்வை பதிவு செய்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் வருவாய் 25% உயர்ந்து, 29044 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் லாபம் 2351 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், பாட்டம் லைன் 14% உயர்வையும், டாப்லைன் 3% சரிவையும் பதிவு செய்துள்ளது.
மாருதி சுசுகியின் மார்ஜின் வேல்யூ முதல் முறையாக கடந்த 2 வருடத்தில் 9.5 சதவீதத்தை கடந்து பதிவாகியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில், 9.75% ஆக மார்ஜின் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த காலாண்டில் மாருதி சுசுகி விற்பனை வருடாந்திர அடிப்படையில் 8% உயர்ந்து, 465911 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் மாதாந்திர அடிப்படையில் 10% சரிந்துள்ளது. மேலும், உள்நாட்டு விற்பனை 10.5% வருடாந்திர உயர்வையும், ஏற்றுமதி 5% சரிவையும் பதிவு செய்துள்ளன. அத்துடன், நிறுவனத்தின் EBITDA 82% வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது.