இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இன்றைய வர்த்தக நாளில் மாருதி சுசுகி பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய வர்த்தக நாளின் போது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்கு 12966 ரூபாய் அளவில் இருந்தது. அத்துடன், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய அளவில் அதிகமான பயணிகள் கார் விற்பனையை கொண்ட நிறுவனம் மாருதி சுசுகி ஆகும். கடந்த காலாண்டில், மாருதி சுசுகி வாகன விற்பனை 13% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், இந்த நிறுவனம் 3878 கோடி அளவில் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48% உயர்வாகும். மேலும், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19.3% உயர்ந்து, 38235 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.