நேற்றைய தினம், மாருதி சுசுகி தனது முதல் பிரீமியம் ரக காரான இன்விக்டோ மாடலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து, மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் உச்சம் தொட்டுள்ளன. நேற்று, 10000 ரூபாயை தாண்டி மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாயின. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் 3.61% உயர்வை பதிவு செய்திருந்தன. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்கு 10036.7 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு வருட உச்சபட்ச பங்கு விலையாக அறியப்படுகிறது. மேலும், 10000 என்ற இலக்கை தாண்டி, மாருதி சுசுகியின் பங்கு விலை உயர்வது இதுவே முதல் முறையாக கூறப்பட்டுள்ளது. இதனால், மாருதி சுசுகி முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.