தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் மீது சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை அடுத்து கவர்னர் வசம் இருக்கும் நிலுவையில் உள்ள மசோதாக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனுமதி இல்லை என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஒப்புதல் அளிக்காதற்கான காரணம் விரிவாக தெரிவிக்கப்படவில்லை.
எனவே தமிழக அரசு உடனடியாக அந்த பத்து மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்து இன்று கூட்டம் கூட்டப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இவை தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














