கடந்த வாரத்தில், இந்தியாவின் மதிப்புமிக்க அல்லது முன்னணி 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 2.89 லட்சம் கோடி அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய அளவில் உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச் மார்க் 1822.83 புள்ளிகள் அல்லது 2.36% உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் உயர்வடைந்துள்ளன. இவற்றின் கூட்டு சந்தை மதிப்பு 289699.42 கோடி அளவில் உயர்வடைந்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு 21 லட்சம் கோடியை முதன் முறையாக தாண்டி வரலாறு படைத்துள்ளது. அதே சமயத்தில், கடந்த வாரத்தில் எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.