கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மீஷோ இணைய வர்த்தக நிறுவனத்தின் வருவாய் 77% உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாத இறுதியில் மீஷோ நிறுவனத்தின் வருவாய் 5735 கோடி ஆகும். மேலும், நிறுவனத்தின் இழப்புகள் 48% சரிந்து 1675 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் 6 மாத காலத்தில், மீஷோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 37% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் இழப்புகளில் 90% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மீஷோ நிறுவனத்தின் வருவாய் 3521 கோடி ரூபாயாகவும், இழப்பு 141 கோடி ரூபாயாகவும் உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், நல்ல வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.