மெட்டா இந்தியா நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவின் தலைவராக விகாஸ் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விளம்பர வணிகப் பிரிவின் தலைவரான அருண் ஸ்ரீனிவாஸ் கீழ் இவர் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்டா நிறுவனத்தின் விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து இவர் பணியாற்றுவார் என சொல்லப்பட்டுள்ளது.
விகாஸ் புரோகித், டாடா கிளிக், அமேசான், ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா, டாமி ஹில்ஃபிகர் ஆகிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் 20 வருட பணி அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா பிர்லாவில் பணியைத் தொடங்கிய அவர், இறுதியாக டாடா கிளிக்கின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். கடந்த அக்டோபர் மாதத்தில், டாடா கிளிக்கின் தலைமை பதவியிலிருந்து விகாஸ் புரோகித் விலகியது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனம் குறித்து அருண் ஸ்ரீநிவாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இவரது வருகை, மெட்டா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு துணை புரியும் என தெரிவித்துள்ளார்.