இன்ஸ்டாகிராம், வாட்சப் பணியாளர்கள் பணி நீக்கம் - மெட்டா தகவல்

October 18, 2024

வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, நிறுவனத்தின் இலக்கை மறுசீரமைக்கும் நோக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில குழுக்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதாகவும், சில ஊழியர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தி வெர்ஜ் என்ற தொழில்நுட்ப நாளிதழ், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் ஆகியவற்றில் பணிநீக்கம் நடந்துள்ளது என […]

வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, நிறுவனத்தின் இலக்கை மறுசீரமைக்கும் நோக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில குழுக்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதாகவும், சில ஊழியர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தி வெர்ஜ் என்ற தொழில்நுட்ப நாளிதழ், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் ஆகியவற்றில் பணிநீக்கம் நடந்துள்ளது என அறிவித்தது. கரோனா காலத்தில் அதிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்ட பின்னர், அதை சரி செய்ய மெட்டா தொடர்ந்து பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. 2022-ல் 11,000 மற்றும் 2023-ல் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu