ட்விட்டர் தளத்துக்கு போட்டியாக திரட்ஸ் என்ற எழுத்துப் பதிவு செயலியை மெட்டா நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற திரட்ஸ் செயலியின் வெப் வெர்ஷன் விரைவில் வெளியாக உள்ளதாக தற்போது மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று இந்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் ட்விட்டருக்கு போட்டியாக வெளியான திரட்ஸ் செயலி, குறுகிய காலத்தில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக வரலாறு படைத்தது. குறிப்பாக, சாட்ஜிபிடி செயலியின் சாதனையை திரட்ஸ் முறியடித்தது. இந்த நிலையில், செயலி வெளியாகி அடுத்த சில வாரங்களில் அதன் பயன்பாடு குறைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. எனினும், பொதுமக்கள் இடையே திரட்ஸ் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, செயலிகான வெப் வெர்ஷனை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.