மாதவரம்-ரெட்டேரி இடையே மெட்ரோ ரெயில் 2026-ம் ஆண்டு இயக்கப்படும்

April 18, 2023

மாதவரம்-ரெட்டேரி இடையே மெட்ரோ ரெயில் 2026-ம் ஆண்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 2-ம் கட்டமாக, மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இங்கு பணிகளை விரைந்து முடித்து 2026-ம் ஆண்டுக்குள் மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இதற்காக இதுவரை […]

மாதவரம்-ரெட்டேரி இடையே மெட்ரோ ரெயில் 2026-ம் ஆண்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் 2-ம் கட்டமாக, மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இங்கு பணிகளை விரைந்து முடித்து 2026-ம் ஆண்டுக்குள் மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இதற்காக இதுவரை 65 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. மாதவரம் டெப்போ மெட்ரோ, அசிசி நகர், மஞ்சம்பாக்கம், வேல் முருகன் நகர், ரெட்டேரி சந்திப்பு ஆகிய 7 இடங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் பயண தொலைவு 11 கிலோ மீட்டர் ஆகும். மாதவரம் டெப்போவில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu