மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவின் காரணமாக மேலும் இரண்டு நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் ஊட்டி மலை பாதையில் கல்லாறு - ஹில்குரோவ் இடையே 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பாறைகள் அனைத்தும் உருண்டு தண்டவாளத்தில் விழுந்து தண்டவாளம் முழுதும் மூடியபடி கிடக்கின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட இருந்த மலை ரயில் மண்சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில் போக்குவரத்து இன்று நாளையும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.