மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு 2 வாரங்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும்

August 8, 2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நீர் திறந்துவிடப்படும் நிலை உருவாகியுள்ளது. பருவ மழை பெய்ததால் காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாமல் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அணைக்கு வரும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 1/2 […]

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நீர் திறந்துவிடப்படும் நிலை உருவாகியுள்ளது.

பருவ மழை பெய்ததால் காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாமல் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அணைக்கு வரும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 1/2 அடி வீதம் சரிந்து வருகிறது.

பாசனத்திற்கு தண்ணீர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே திறக்க முடியும் நிலை உருவாகியுள்ளது. சம்பா, குறுவை சாகுபடிக்கு நீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக வழங்கினால் அல்லது பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடி நிறைவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu