சாதாரண புகைப்படத்தை ஜிப் (Gif) புகைப்படமாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Pix2Gif என்று இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்டில் புகைப்படங்களை ஜிப் புகைப்படங்களாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனத்தை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. இது இமேஜ் ட்ரான்ஸ்லேஷன் முறையில் புகைப்படங்களில் அசைவுகளை ஏற்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம், சில வினாடிகளுக்குள் ஸ்டில் புகைப்படத்தை ஜிப் புகைப்படமாக மாற்ற முடியும். அத்துடன், புகைப்படங்களில் டெக்ஸ்ட் ப்ராம்ப்ட் களை ஏற்படுத்தவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இந்த கருவி, டிஜிட்டல் துறை சார்ந்த கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.