மைக்ரோசாப்ட் நிறுவனம், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. எனவே, நிறுவனத்தின் லாபம் வருடாந்திர அடிப்படையில் 9% உயர்ந்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் காலாண்டு லாபம் 18.3 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 7% உயர்ந்து, 52.9 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு 2.45 டாலர்கள் உயர்வை பதிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சாட் பாட் - சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏ ஐ நிறுவனத்தில், மைக்ரோசாப்ட் அதிக முதலீடுகளை செய்துள்ளது. மேலும், தனது கிளவுட் சர்வீசஸ், பிங்க் தேடுபொறி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி உள்ளது. இவற்றின் காரணமாகவே மைக்ரோசாப்ட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














