ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பார்வையாளராக மைக்ரோசாப்ட் நிறுவனம் இருந்து வந்தது. தற்போது குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பார்வையாளராக மைக்ரோசாப்ட் இணைக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வாக்களிக்கும் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை பார்வையிடுவதற்கான அனைத்து அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிரிட்டன் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனம் பார்வையாளராக இருப்பதற்கு எதிராக இருந்தன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ஓபன் ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், “ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எனவே, குழுவில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என தெரிவித்துள்ளது.