இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார்

October 16, 2023

இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்தார். இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 3000-திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். காசா மீதான தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவ படை தயாராகி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் […]

இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 3000-திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். காசா மீதான தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவ படை தயாராகி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த போரில் லெபனானின் ஆயுத குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேலிய வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து நான்கு கிலோமீட்டர் வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெல் அவிவ் நகரில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் பிணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu