சூடானில் ராணுவ விமானம் வீடுகள் மீது வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சூடானில், ஓம்துர்மானுக்கு கிழக்கில் உள்ள வாடி சாயிட்னா ஏர் பேஸிலிருந்து டேக் ஆப் செய்யப்பட்ட ஆன்டோனோவ் ராணுவ விமானம், வீடு ஒன்றின் மேல் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீட்டு பகுதியில் வாழ்ந்த பொதுமக்களும் இதில் பலியாகியுள்ளனர். இந்த விபத்தின் காரணம் குறித்து தற்போது வரைத் தெரியவில்லை.
சூடான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமான உள்நாட்டு போர் காரணமாக, போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தீவிரமாக நடைபெற்றுள்ள நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது