கர்நாடகாவில் பால் விலை உயர்வு

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நாளை முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. கர்நாடகாவில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமயா, நிதி ஆதாரங்களை திரட்டும் நோக்கத்தில் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஈடு செய்யும் பொருட்டு அரை லிட்டர், ஒரு லிட்டர் […]

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நாளை முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

கர்நாடகாவில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமயா, நிதி ஆதாரங்களை திரட்டும் நோக்கத்தில் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஈடு செய்யும் பொருட்டு அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்களில் கூடுதலாக 50 மில்லி பால் சேர்க்கப்படும் எனவும் பால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது ஒரு லிட்டர் நீல நிற பால்பாக்கெட் 42 ரூபாயிலிருந்து 44 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற வகை பால் பாக்கெட் விலையும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu