நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் நான்காம் கட்ட வாக்கு பதிவில் 63.04% சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று நான்காம் கட்டத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. 96 தொகுதிகளுக்காக நடைபெற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதில் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். முடிவில் மொத்தம் 63.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிகபட்சம் 68.20% வாக்குகள் பதிவாகியுள்ளது