உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடிக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 11 ஆண்டுகளுக்கு பின் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காலை ஏழு மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை வழி நடத்தி வரும் நிலையில் இந்த சோதனைக்கான காரணம் என்ன என்ற விவரம் அறியப்படவில்லை. மேலும் பொன்மொழியின் மகன் கௌதம சிகாமணியின் ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை வெளிநாடுகளில் முதலீடு செய்ததன் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.