அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நீதிமன்ற காவல் எட்டாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தான் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் அதிகாரிகள் இவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இரண்டு முறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் உடல் நிலையை காரணம் காட்டி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புழல்சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் இவர் ஆஜரானார்.இதன் விசாரணையின் முடிவில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எட்டாவது முறையாக காவல் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.