சித்த மருத்துவத்தை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை

சித்த மருத்துவத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு   குழுமம் ஆகியவற்றின் பொதுக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி பேசுகையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வளர்ச்சி, […]

சித்த மருத்துவத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு   குழுமம் ஆகியவற்றின் பொதுக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி பேசுகையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த விவாதங்கள், சித்த மருத்துவத்தை எல்லை தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வசிப்பவர்கள் பயன் பெறுவதற்கான பல திட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

மேலும் சித்த மருத்துவ முறையை நாடெங்கிலும் முன்னெடுக்கத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லவதும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu