தலைநகர் டில்லியில் ரூ.477 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட 'சென்ட்ரல் விஸ்டா' அவென்யூவை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா'' திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டில்லி இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜ்பாதையில் புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள், மத்திய அரசின் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதில், இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான 3 கி.மீ., தூரப்பகுதியில் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2019 பிப்.,ல் இங்கு கட்டுமானம் துவங்கியது முதல் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த பகுதி சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக இருந்தது. மேலும் 16.5 கி.மீ., புதிய நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாதையில், முன்பு இல்லாத வகையில் தற்போது 106 கழிப்பறைகள், 16 நிரந்தர பாலங்கள், 140 புதிய மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.














