மெக்கா பகுதியில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ள பயணிகள் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல், நிகழாண்டுக்கான ஹஜ் பயணம் தொடங்கியது. நிகழாண்டில் 15 லட்சம் பேர் மெக்காவில் திரண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், உடலில் உள்ள நீர்ச்சத்து இழந்து, ஹஜ் புனித யாத்திரை காரர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்கா பகுதியில், ராணுவ வீரர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் சேவை செய்ய குவிந்துள்ளனர்.