இதுவரை 700க்கும் அதிகமான ஏவுகணை தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்பதாக கூறி காசாவில் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது
இஸ்ரேலிய ராணுவ படை. அம்மாஸ் அமைப்புக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ஏவுகணை தளங்களையும் அழித்துள்ளது. இன்னும் தொடர்ச்சியான சோதனைகளை செய்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படை காசாவில் உள்ள ஒரு இடுகாடுக்குள் ஏவுகணைகளை தகர்த்ததாக கூறியுள்ளது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்து ஏவுகணைகள் இஸ்ரேலை குறிவைத்து நின்றது என்று கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு பின்னால் இருந்து தாக்குதல் நடத்தினர். எனவே அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏவுகணை தளங்களையும் அழித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.