எம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி

September 14, 2024

உலக சுகாதார அமைப்பு, பெரியவர்களில் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு முதல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் எம்-பாக்ஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமாக அமையும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை தற்போது, கேவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்களே வாங்க முடியும். ஒரே ஒரு உற்பத்தியாளர் இருப்பதால், தடுப்பூசி இருப்பு குறைவாகவே உள்ளது. உலக சுகாதார அமைப்பின் […]

உலக சுகாதார அமைப்பு, பெரியவர்களில் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு முதல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் எம்-பாக்ஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமாக அமையும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை தற்போது, கேவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்களே வாங்க முடியும். ஒரே ஒரு உற்பத்தியாளர் இருப்பதால், தடுப்பூசி இருப்பு குறைவாகவே உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், நன்கொடையாளர்கள் விரைவாக தேவைப்படும் பகுதிகளில் தடுப்பூசியை விநியோகிக்க வேண்டுமென்று கோரியுள்ளார். இந்த தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோசாக வழங்கலாம். 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்றாலும், எம்-பாக்ஸ் நோயால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில், குழந்தைகளுக்கும் இளம்பருவத்தினருக்கும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu