ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பரவும் - உலக சுகாதார அமைப்பு

August 16, 2024

உலக சுகாதார அமைப்பு குரங்கமையை சர்வதேச சுகாதார அவசர கால நிலையாக அறிவித்துள்ளது. குரங்கம்மை ஒருவகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோயாகும். நடப்பாண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள 13 நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கென்யா, காங்கோ, ரூவாண்டா மற்றும் உகாண்டா […]

உலக சுகாதார அமைப்பு குரங்கமையை சர்வதேச சுகாதார அவசர கால நிலையாக அறிவித்துள்ளது.

குரங்கம்மை ஒருவகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோயாகும். நடப்பாண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள 13 நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கென்யா, காங்கோ, ரூவாண்டா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளிலும் இது பரவியுள்ளது. ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசிகளே இருப்பில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விவகாரம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார். இந்த வைரஸ் பாதிப்பு ஆப்பிரிக்காவை கடந்து ஸ்வீடனில் பரவியுள்ளது. வருகிற நாட்களில் ஐரோப்பியா முழுவதும் இது பரவும் சாத்தியம் அதிகம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu