முகேஷ் அம்பானி ஆதரவுடன் செயல்படும் ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் மனித உருவ ரோபோவை (ஹியூமனாய்ட் ரோபோ) வெளியிட உள்ளது. டெஸ்லா, பாஸ்டன் டைனமிக்ஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நொய்டாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மனித உருவ ரோபோக்கள், ஃபேஷன், சில்லறை விற்பனை மற்றும் ஆற்றல் துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இருப்பினும், இந்த ரோபோக்கள் என்னென்ன பணிகளைச் செய்யும் மற்றும் அவற்றின் விலை என்ன என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மனித உருவ ரோபோக்களை உருவாக்குவது அதிக செலவு மிக்கது என்றாலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட இந்தியாவால் முடியும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கீத் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.