லிவர்பூல் கால்பந்து அணியை வாங்கும் திட்டத்தில் முகேஷ் அம்பானி

November 14, 2022

பிரிட்டனின் லிவர்பூல் கால்பந்து அணியை கைப்பற்றும் திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிவர்பூல் கால்பந்து அணி விற்கப்படுவதாக, அணியின் தற்போதைய உரிமையாளர் ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG) அறிவித்துள்ளது. அணியை விற்பனை செய்வது குறித்து, உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 பில்லியன் யூரோக்களுக்கு இந்த அணி விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே, கடந்த […]

பிரிட்டனின் லிவர்பூல் கால்பந்து அணியை கைப்பற்றும் திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிவர்பூல் கால்பந்து அணி விற்கப்படுவதாக, அணியின் தற்போதைய உரிமையாளர் ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG) அறிவித்துள்ளது. அணியை விற்பனை செய்வது குறித்து, உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 பில்லியன் யூரோக்களுக்கு இந்த அணி விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 2010 ஆம் ஆண்டு, இந்த அணி கடனில் தத்தளித்த போது, அதன் 51% பங்குகளை பெற்று, அதன் கடனை அடைக்க அம்பானி குழுமம் முன் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை, லிவர்பூல் கால்பந்து அணியை முகேஷ் அம்பானி கைப்பற்றுவார் என்று கருதப்படுகிறது. அத்துடன், இந்திய ஐபிஎல் போட்டியில், மும்பை அணியின் உரிமையாளராக ரிலையன்ஸ் குழுமம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu