கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவரை கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இப்பதவியில் இவர் 4 ஆண்டுகளுக்கு இருப்பார் என தெரிகிறது.