மின்சார வாகனங்கள் வர்த்தகத்தில் கால் பதிக்கும் முருகப்பா குழுமம்

September 16, 2022

முருகப்பா குழுமத்திற்கு சொந்தமாக டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா (TII) என்ற பெயரில் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 75000 வாகனங்களை TII நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மஹிந்திரா & மஹிந்திரா, கைனடிக் க்ரீன், பியாகியோ, ஆய்லர் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், TII-ன் தொழில்முறை போட்டியாளராக உள்ளன. அந்த நிறுவனம், தற்போது மின்சார வாகன உற்பத்தியில் கால் பதித்துள்ளது. அத்துடன், அடுத்த 2 ஆண்டுகளில், இந்தியாவின் மின்சார மூன்று சக்கர வாகன உற்பத்தியில், […]

முருகப்பா குழுமத்திற்கு சொந்தமாக டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா (TII) என்ற பெயரில் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 75000 வாகனங்களை TII நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மஹிந்திரா & மஹிந்திரா, கைனடிக் க்ரீன், பியாகியோ, ஆய்லர் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், TII-ன் தொழில்முறை போட்டியாளராக உள்ளன. அந்த நிறுவனம், தற்போது மின்சார வாகன உற்பத்தியில் கால் பதித்துள்ளது. அத்துடன், அடுத்த 2 ஆண்டுகளில், இந்தியாவின் மின்சார மூன்று சக்கர வாகன உற்பத்தியில், முதல் 3 இடங்களுக்குள் இடம்பிடிக்க இலக்கு நிர்ணயித்து, செயல்பட்டு வருகிறது.

தொழில் துறையில், 100 வருட பாரம்பரியம் கொண்ட முருகப்பா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், TII-ன் லட்சியப் பாதைக்கு துணை நிற்க உள்ளன. குறிப்பாக, முருகப்பா குழுமத்தின் சோழமண்டலம் நிதி நிறுவனம், TII திட்டத்திற்கு நிதி அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதே குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனம், மோட்டார்கள் மற்றும் கியர் பாக்ஸ்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து தர உள்ளது. இந்தத் தகவலை TII-ன் தலைவர் அருண் முருகப்பன் தெரிவித்தார்.

TII நிறுவனம், மின்சார வாகன உற்பத்தியில், சுமார் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், மின்சார வாகனத் துறையில், 3 சக்கர வாகனங்களின் வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார். இருசக்கர மற்றும் 4 சக்கர மின்சார வாகன வர்த்தகத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், 3 சக்கர வாகன வர்த்தகத்தில் TII முனைப்பு காட்டுவதாக விளக்கினார்.

மேலும், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் மின்சார டிராக்டர்கள் பிரிவில், சிறந்த முறையில் செயலாற்ற, IPLTech Electric மற்றும் Celestial E-Mobility ஆகிய புத்தாக்க நிறுவனங்களை TII சமீபத்தில் கையகப்படுத்தியது எனக் கூறினார். அத்துடன், TII-ன் மின்சார கனரக வாகனம், தற்போது பரிசோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அருண் முருகப்பன் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu