தஜகிஸ்தானில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானில் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். இதில் 96 சதவீதம் பேர் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், அங்கு ஹிஜாபுக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் ஐந்து லட்சம் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் இமாம் அலி ரகுமான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஹிஜாபுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த ஆடை தஜகிஸ்தான் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அவர் கூறி வருகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டில் கல்வி நிலையங்களில் மாணவர்கள் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து வர கல்வி அமைச்சகம் தடை விதித்திருந்தது. இதே போல் கஜகஸ்தான், அசர்பாய்ஜான், கிர்கிஸ்தான், கொசாவோ போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் மற்றும் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.