மியான்மரில் தேர்தல் ஒத்திவைப்பு

August 1, 2023

மியான்மரில் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததை அடுத்து ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து 2023 […]

மியான்மரில் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததை அடுத்து ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மியான்மரில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நான்காவது முறையாக அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் நடத்த இன்னும் பாதுகாப்பு தேவைப்படுவதால் இந்த அவசர கால சட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது சரிவராது எனவும், அவசரமாக தேர்தலை நடத்தக்கூடாது என்பதாலும் எங்களுக்கு அவகாசம் தேவைப்படும் என கூறி இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu