தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற ஒரு கட்சிக்கு எட்டு சதவீதம் வாக்குகள் தேவை.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. அதேபோன்று விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகிறது