நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய, சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொதுமக்களின் துணையோடு கண்டறிந்து செப்பனிடும் திட்டத்திற்காக "நம்ம சாலை" என்ற புதிய மென்பொருள் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்க இதன் தொடக்க விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, "நம்ம சாலை" செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.