இன்போசிஸ் நிறுவனத்தின் தோற்றுநர் நாராயணமூர்த்தி, தனது 4 மாத பேரக் குழந்தைக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட 15 லட்சம் இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு இதுவாகும். அதன்படி, அவரது பேரன் ஏக்ரகா ரோகன் மூர்த்திக்கு, இன்போசிஸ் நிறுவனத்தில் 0.04% பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு பரிமாற்றத்துக்கு பிறகு, நாராயணமூர்த்தி வைத்திருக்கும் இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பு 0.4% இல் இருந்து 0.36% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் சமீபத்தில் பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த பங்கு பரிமாற்றம் சந்தைக்கு வெளியே நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.