நிலவுக்கு மிக நெருக்கமாகச் சென்ற ஓரியன் விண்கலம்

December 7, 2022

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்து 79 மைல் தொலைவில் பறந்து, நிலவுக்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, நிலவைச் சுற்றி வரும் பாதையில், ஓரியன் விண்கலம் இவ்வாறு நெருக்கமாகச் சென்றுள்ளது. அதன் பின்னர், பூமிக்கு திரும்பும் பாதையில் விண்கலம் இயக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை நிமிடங்களுக்கு, அதன் மோட்டார் இயக்கப்பட்டு, அதன் பாதை பூமியை நோக்கி திருப்பப் பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், […]

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்து 79 மைல் தொலைவில் பறந்து, நிலவுக்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ளது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, நிலவைச் சுற்றி வரும் பாதையில், ஓரியன் விண்கலம் இவ்வாறு நெருக்கமாகச் சென்றுள்ளது. அதன் பின்னர், பூமிக்கு திரும்பும் பாதையில் விண்கலம் இயக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை நிமிடங்களுக்கு, அதன் மோட்டார் இயக்கப்பட்டு, அதன் பாதை பூமியை நோக்கி திருப்பப் பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், நிலவுக்கு மிக நெருக்கமாகச் சென்ற போது, ஓரியன் வெண்கலம் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

ஓரியன் விண்கலம், மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இது, அதிக தூரம் விண்வெளியில் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளது. தற்போது, பூமியை நோக்கி வரும் இந்த விண்கலம், டிசம்பர் 11ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu