நிலவில் மனிதர்களை குடியேற்றும் திட்டத்தில் நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அங்கு வீடுகள் கட்டும் திட்டத்தில் நாசா ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.வரும் 2040 ஆம் ஆண்டுக்குள், நிலவில் வீடுகளை கட்ட நாசா இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 3டி பிரிண்டர் ஒன்றை நிலவுக்கு அனுப்பி, அங்கு கட்டுமானங்களை எழுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நிலவில் உள்ள பாறைகள் மற்றும் கனிமங்களை கொண்டு நிலவின் மேற்பரப்பில் வீடு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் பிரிண்டர் இந்த வேலைகளை செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பிரிண்டர் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், பிப்ரவரி மாதத்தில் இது நிலவுக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் வெற்றி பெற நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது.














