அமெரிக்காவில் அமைந்துள்ள நாசா தலைமையகத்தில் மின் துண்டிப்பு நேர்ந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இருக்கும் தகவல் தொடர்பை நாசா இழந்துள்ளது. கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட உடன், ரஷ்ய தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கு உடனடி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு நாசாவில் ஏற்பட்ட மின் துண்டிப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நாசா வரலாற்றில் பேக் அப் கட்டுப்பாடுகள் இழக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தற்போது, நாசா செயல்பாடுகள் அனைத்தும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.