சூரியனை விட ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான இன்ஃப்ராரெட் கேலக்ஸி - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பகிர்வு

சூரியனின் ஒளியை விட ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக இருக்கும் இன்ஃப்ராரெட் கேலக்ஸியின் புகைப்படம் ஒன்றை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. ARP 220 என்ற கேலக்ஸி நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தை விட 300 மடங்கு ஒளியை வெளியேற்றுவதாக சொல்லப்படுகிறது. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பகிர்ந்துள்ள இந்த கேலக்ஸியின் புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புகைப்படத்தை பதிவிட்டு நாசா குறிப்பிட்டுள்ளவை: “புகைப்படத்தில் இந்த கேலக்ஸி ஒரு பனித்துளி போன்ற உருவ அமைப்பை கொண்டுள்ளது. […]

சூரியனின் ஒளியை விட ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக இருக்கும் இன்ஃப்ராரெட் கேலக்ஸியின் புகைப்படம் ஒன்றை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. ARP 220 என்ற கேலக்ஸி நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தை விட 300 மடங்கு ஒளியை வெளியேற்றுவதாக சொல்லப்படுகிறது. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பகிர்ந்துள்ள இந்த கேலக்ஸியின் புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படத்தை பதிவிட்டு நாசா குறிப்பிட்டுள்ளவை: “புகைப்படத்தில் இந்த கேலக்ஸி ஒரு பனித்துளி போன்ற உருவ அமைப்பை கொண்டுள்ளது. மத்தியில் வெள்ளை நிற மையப் பகுதி மற்றும் 8 பெரிய கூர்முனை கோடுகள் ஆகியவை புகைப்படத்தில் தெரிகின்றன. இவை, 2 ஸ்பைரல் கேலக்ஸிகள் ஒன்றாக இணையும் போது ஏற்பட்ட மையப் பகுதியின் உருவம் ஆகும். இது 250 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள செர்பென்ஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கேமராக்கள் இதனை சாத்தியப்படுத்தி உள்ளன” என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu