இன்று பூமிக்கு நெருக்கமாக 5 விண்கற்கள் வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. மேலும், நாசாவின் விண்கற்கள் ஆய்வு தொடர்பான பிரிவு இன்று பூமியை நெருங்கும் விண் கற்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1.Asteroid 2023 CH2 என்று பெயரிடப்பட்டுள்ள 59 அடி விண்கல், சுமார் 36192 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது. இது பூமியிலிருந்து சுமார் 417280 கிலோமீட்டர் தொலைவிற்கு வரவுள்ளது.
2.Asteroid 2023 CU1 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், வெறும் 2.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு பூமிக்கு நெருக்கமாக வர உள்ளது. இது 36 முதல் 82 அடி வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30836 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.Asteroid 2023 CP என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், 12337 வேகத்தில், பூமியிலிருந்து 6.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடக்கவுள்ளது. இது 110 அடி அகலம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.Asteroid 2023 CZ1 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், சுமார் 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடக்க உள்ளது. இது 30931 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
5.Asteroid 2023 CP2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், 22 முதல் 52 அடி அகலம் உள்ளதாக கருதப்படுகிறது. சுமார் 18291 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வரும் இந்த விண்கல், 1.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு நெருக்கமாக வர உள்ளது.