நாசாவின் டார்ட் மிஷன் வெற்றிகரமாக நிறைவுற்றது

September 27, 2022

விண்வெளியில் உள்ள விண்கல் அல்லது குறுங்கோள் போன்றவற்றை, அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து மாற்றுவதற்காக, நாசா ஆய்வு மேற்கொண்டு வந்தது. எதிர்காலத்தில் பூமியை அச்சுறுத்தும் வகையில், விண்கல் அல்லது குறுங்கோள் போன்ற ஏதாவது ஒன்று, பூமியை நெருங்கினால், அதை எதிர்கொள்வதற்கானத் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வேண்டுமென்றே விண்கல் அல்லது குறுங்கோளுடன் மோதல் விளைவை உண்டாக்கி, அது குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்தது. அதன்படி, டார்ட் எனப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் […]

விண்வெளியில் உள்ள விண்கல் அல்லது குறுங்கோள் போன்றவற்றை, அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து மாற்றுவதற்காக, நாசா ஆய்வு மேற்கொண்டு வந்தது. எதிர்காலத்தில் பூமியை அச்சுறுத்தும் வகையில், விண்கல் அல்லது குறுங்கோள் போன்ற ஏதாவது ஒன்று, பூமியை நெருங்கினால், அதை எதிர்கொள்வதற்கானத் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வேண்டுமென்றே விண்கல் அல்லது குறுங்கோளுடன் மோதல் விளைவை உண்டாக்கி, அது குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்தது. அதன்படி, டார்ட் எனப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் குறிக்கோள் விண்கல்லுடன் மோதல் விளைவை ஏற்படுத்துவது ஆகும். அது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இது குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி! டார்ட் திட்டத்தின் டிராக்கோ (DRACO) கேமரா அளித்துள்ள தகவலின் படி, விண்கலம் துல்லியமாக டைமார்பஸ் குறுங்கோளுடன் மோதி உள்ளது. விண்கலம் ஒரு சிறிய இயந்திரம் அளவிலானது. அதே வேளையில், டைமார்பஸ் குறுங்கோள் ஒரு கால்பந்து மைதானம் அளவிலானது. எனவே, இந்த துல்லியமான மோதல் விளைவினால் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த மோதலால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை” என்று பதிவிட்டுள்ளது. மேலும், “மோதல் விளைவின் போது, க்யூப் சாட் பகுதி, விண்கலத்தில் இருந்து வெளியேறியது. சுமார் 3 நிமிடங்களுக்குப் பின்னர், மோதல் விளைவுகளை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்துள்ளது. அவை, வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வெளியிடப்படும்” என்று நாசா தெரிவித்துள்ளது.

டைடிமாஸ் என்ற பெரிய அளவிலான குறுங்கோளை, டைமார்பஸ் என்ற சிறிய குறுங்கோள், 11 மணி நேரம் 55 நிமிடங்களில் சுற்றி வருகிறது. இதன் சுற்றுவட்டப் பாதை 525 அடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. டார்ட் விண்கலம், மிகுந்த வேகத்தில், டைமார்பஸ் குறுங்கோளுடன் மோதும் பொழுது, சுமார் 10 பில்லியன் ஜுல்கள் அளவிலான கைநடிக் எனர்ஜி வெளியேற்றப்படும். மேலும், குறுங்கோளின் மேற்பரப்பில் கிரேட்டர் உருவாகும். அத்துடன், டைமார்பஸ் குறுங்கோளின் சுற்றுவட்ட பாதையில் மாற்றங்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இது குறித்த புகைப்பட ஆதாரங்கள் வெளிவரும்போது, டார்ட் ஆராய்ச்சி விரிவடையும் என்று நாசா கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu